சைட்டம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 12 பேர் வைத்தியசாலையில்…

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சைட்டம் கல்லூரிக்கு எதிரான பேரணி ஒன்று நேற்று(10) விஹாரமகாதேவி பூங்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கொள்ளுப்பிட்டி சந்தியை அடைந்த போது, ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்நிலையிலேயே , அப் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக குறித்த மாணவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.