சைட்டம் கல்லூரிக்கு மாணவர்கள் உட்சேர்ப்பதை நிறுத்தமாட்டோம் – நெவில் பெர்னாண்டோ….

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு முன்வைக்கப்பட்டிருந்த யோசனை குறித்து உயர் கல்வியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தலைவர் நெவில் பெர்னாண்டோ நாளாந்த பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதுவரை தொடர்ந்தும் மாணவர்களை கல்லூரிக்கு உட்சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு தரமான கல்வியினை வழங்கும் நோக்கில் தமது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு அதிக பணத்தினை ஊதியமாக வழங்குவதாகவும், சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை உட்சேர்க்காதவிடத்து பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாதுள்ளதாகவும் நெவில் பெர்னாண்டோ தெரிவிக்கிறார்.

தமது கல்லூரியின் மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சிகளை மேற்கொள்ள ஒரு பாடத்திற்கு தலா ரூ.50,000 வழங்கியுள்ளதாகவும், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மீளவும் மருத்துவப் பயிற்சியினை வழங்க அவர்கள் உடன்பாடில்லை எனவும் நெவில் பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்;

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சைட்டம் மருத்துவ பட்டாதாரிகளை மருத்துவ சபையில் பதிவு செய்யாதவிடத்து நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் மாணவர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்வார்கள்.. எனவும் அவர் தனது கருத்தில் தெரிவித்திருந்தார்.