சைட்டம் குறித்து இறுதித் தீர்மானத்திற்காக இலங்கை மருத்துவ சபை கூடுகிறது…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை மருத்துவ சபை இன்று(17) ஒன்று கூடவுள்ளதாக மருத்துவ சபையின் செயற்பாட்டு அலுவலகர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 8ம் திகதி ஏற்கனவே மருத்துவ சபை கூடியிருந்த போது சகல உறுப்பினர்களதும் ஒன்று கூடும் சந்தர்ப்பத்திலேயே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.

இந்நிலையில் இன்று அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.