சைட்டம் குறித்து ஒரு வாரத்தினுள் தீர்மானம் வேண்டும் – அரசுக்கு GMOA சிவப்பு சமிஞ்சை….

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) குறித்து தீர்மானமிக்கதோர் தீர்மானம் வழங்காவிடின் ஏப்ரல் முதல் வாரம் தொடக்கம் பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடிக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு சிவப்புச் சமிஞ்சை விடுத்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி குறித்து கீழுள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு வைத்திய அதிகாரிகள் சங்கம், மருத்துவ பீட விரிவுரையாளர்கள் மற்றும் பீடாதிபதிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1. சுகாதார அமைச்சர் இனால், மருத்துவக் கல்வியில் குறைந்தபட்ச தரத்தை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடல் மற்றும் மருத்துவ சபையின் தொழில்நுட்ப அறிக்கையினை சட்டபூர்வமாக்கல்.

2. உயர் கல்வியமைச்சின் அமைச்சரால் சைட்டம் மருத்துவ சபையின் நம்பகத்தன்மை குறித்து ஆராயவில்லை என நீதிமன்றிற்கு தெரியப்படுத்தல்.

3. சைட்டம் கல்லூரிக்கு தொடர்ந்தும் மாணவர்களை உள்வாங்குவதனை நிறுத்துதல்

4. குறித்த நிறுவனத்தினால் பட்டப்படிப்பினை வழங்குவதனை உடனடியாக நிறுத்துதல்.

5. தற்போது குறித்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலங்கை வைத்திய சபையினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தீர்வினை பெற்றுத்தரும் வகையில் குழுவொன்றினை நியமித்தல்.

போன்ற காரணங்களாகும்.

(rizmira)