சர்ச்சைக்குரிய மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று(25) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
குறித்த இக்கலந்துரையாடலின் போது சாதகமான முடிவு எட்டப்படும் எனவும், குறித்த கல்லூரிக்கான புதிய அனுமதிகளை கோரும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறும் தமது சங்கம் கோரியுள்ளதாகவும், அதன் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்லூரியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் பங்கேற்கவுள்ளதுடன் ஜனாதிபதியுடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடல் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
(rizmira)