சைட்டம் குறித்த அரசின் நிலைபாட்டிற்கு இன்று சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு சைட்டம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் கூடி ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் இன்று(30) அறிவிக்கப்பட உள்ளது.

எனினும், அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தமக்கு கிடைக்கப் பெறவில்லை எனவும், அதனை ஊடகங்களில் ஊடாகவே அறிந்து கொண்டதாகவும் சைட்டம் நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

சைட்டம் நிறுவனமானது கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று(29) அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அரசு வெளியிட்டிருந்த குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(rizmira)