சைட்டம் குறித்த சர்ச்சைக்கு அரசினால் நேற்று(29) முன்வைக்கப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக மறுக்கிறோம் என சைட்டம் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில், குறித்த தீர்மானத்தில் “சைட்டம்” பெயர் பலகைக்கு மாற்றீடாக மற்றுமோர் பெயர் பலகையினை பொருத்துவதே அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று(29) இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்புப் பேரணியில் குறித்த அரசின் நிலைபாட்டினை வெளிப்படுத்தும் அறிவித்தலானது கிழித்து எறியப்பட்டது. எதிர்வரும் தினங்களில் சைட்டத்திற்கு எதிரான போரட்டங்கள் தொடர்ந்தும் வெடிக்கும் எனவும் குறித்த தரப்பினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் லால்காந்த குறித்த அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த அறிவித்தலினை பகிரங்கமாக கிழித்தெறிந்தார். மேலும் அவரால் எதிர்வரும் 06ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)