சைட்டம் குறித்த ஜனாதிபதியின் தீர்மானத்தினை GMOA வரவேற்கிறது…

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் மருத்துவ பீடத்துக்கு உள்வாங்க ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதனிய தெரிவித்துள்ளார்.

சைட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட யோசனையில், இது தொடர்பில் கருத்துக்கள் உள்ளடங்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#rishma