சைட்டம் தனியார் கல்லூரிக்கான எதிர்ப்புப் பேரணியில் மாணவர்கள் கைது….

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று(13) கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நேற்று(13) மதியம் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு, லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகாமைக்கு வருகையில் காவல்துறையினர் வீதித்தடையை ஏற்படுத்தி இருந்தனர்.

அதனை தாண்டி செல்ல மாணவர்கள் முற்பட்ட நிலையில் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கோட்டை நீதவான் விதித்திருந்த பேரணிக்கான தடை உத்தரவை கோட்டை காவல்துறையினர், மாணவ ஒன்றியத்திடம் கையளித்தனர்.

எனினும் அதனை கிழித்த எறிந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையிலேயே தண்ணீர் மற்று கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)