சைட்டம் தனியார் நிறுவனத்தை (South Asia Institute of Technology and Medicine)கலைக்கும் நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி சைட்டம் நிறுவனம் இலங்கை தகவல் தொழில்நுட்பம் நிறுவனம் எனப்படும் SLIIT நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்தானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சைட்டம் நிறுவனம் இரத்தாவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்க பெற்றவுடனே குறித்த அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டபூர்வமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#riz