சைட்டம் தனியார் மருத்துவ நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ பீட மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வதற்கான சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(28) கையெழுத்திட்டுள்ளார்.
அதற்கமைய, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டபூர்வ அதிகாரத்துடன் கூடிய சட்டமானது இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சைட்டம் வைத்திய கல்லூரியில் கல்வி கற்ற 982 மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பான விசேட சட்டமூலமானது திருத்தங்களுடன் பாராளுமன்றில் கடந்த 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.