சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்று பாரிய பாத யாத்திரை..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்று(10) பாரிய பாத யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளதாக சைட்டம் எதிர்ப்பு மாணவ இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால், சைட்டம் எதிர்ப்பு சத்தியாகிரக போராட்டம் நேற்று(09) 50 வது தினமாகவும் முன்னெடுக்கப்பட்ட, நிலையில் அங்கு நேற்று(09) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து சைட்டம் எதிர்ப்பு மாணவ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர இதனைக் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் உள்ள, நிலையில் இன்றைய தினம் பாரிய பாதயாத்திரை ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(rizmira)