மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் இலங்கை மருத்துவ சபை தாக்கல் செய்த மனு எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(01) தீர்மானித்துள்ளது.
நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் பிரியந்த ஜயவர்தன, உபாலி அபேரத்ன ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் குறித்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைட்டம் மாணவர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய அவர்களை பதிவு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பிற்கு எதிராக மருத்துவ சபை, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.