சைட்டம் தொடர்பான அரசின் இறுதித் தீர்மானம் இன்று…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் இன்று(25) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அரசின் முடிவு குறித்து இதுவரை எதனையும் தமக்கு தெரியப்படுத்தவில்லை என, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பதிவாளர் எச்.ஆர்.ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையில், சைட்டம் வைத்திய கல்லூரியை, மாலபே தகவல் தொழிநுட்ப நிறுவனத்துடன் இணைப்பது குறித்த பரிந்துரைகள் இருப்பதாக, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் நெவில் பெர்ணான்டோ குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

(rizmira)