மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று முன்தினம்(11) கையளிக்கப்பட்டுள்ளது.
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினையை ஆராய பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த இந்தக் குழு தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் நேற்று முன்தினம்(11) கையளித்ததாக அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் தமது தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கையை ஆராய்வார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)