சைட்டம் தனியார் பல்கலைக்கழக மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சைட்டம் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தில் 2009 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து 2017 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே இந்த சட்டமூலம் உரித்தாகும் என கலாசார மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜதாச ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு முடிவடைந்ததும், சைட்டம் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தினால் எவருக்கும் பட்டம் வழங்க முடியாது. அதுவே இந்த சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த மருத்துவப்பீடம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் விஜதாச ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.