அடுத்த வாரம் சைட்டம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்வு வெளியிடப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அக்வினாஸ் [AQUINAS] பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று(19) நடைபெற்ற வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சைட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த காலத்தில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் குறித்த தீர்வுகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.