சைட்டம் தொடர்பில் இன்று போராட்டம்…

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று(18) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தீர்வு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையே இதற்குக் காரணம் என, அச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிமல் கருணாசிறி கூறியுள்ளார்.