மாலபே, சைட்டம் தனியார் நிறுவனத்தின் வைத்திய பீட மாணவர்களின் கல்விப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்நிறுவனத்தில் வைத்திய கல்வியை தொடர்வதில் ஈடுபட்டிருந்த மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்திய பீடத்திற்கு இணைத்துக் கொள்வதற்கு பொருத்தமான நடைமுறையொன்றை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளில் கவனம் செலுத்தி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவாத்தை நடத்திய பின்னர் இந்த குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழ் கண்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்ததுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- சைட்டம் நிறுவனத்தில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களை மாத்திரம் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தின் வைத்திய பீடத்தில் இணைத்துக் கொள்ளல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூத்தி செய்யும் மாணவர்களுக்கு வைத்திய விஞ்ஞானப்பட்டத்தினை பெற்றுக் கொடுத்தல் .
- இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய தேவையான செலவுகளை அரசாங்கம் வழங்கும்.