மாலபே, சைட்டம் பிரச்சினைக்கு சரியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்து இன்று(21) தொடக்கம் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியப்பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வைத்திய பீட மாணவர்களின் செயற்பாட்டு குழுவும் இன்று(21) முதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பை வழங்குவர் எனவும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் SLIIT நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.