சைட்டம் மருத்துவக் கல்லூரியினை மூடாதவிடத்து 20ம் திகதி அரச வைத்தியர்களது போராட்டம் உறுதி…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 20ம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக ஐக்கிய இலங்கை வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.

தங்களது பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவாக சுகாதார அமைச்சைச் சேர்ந்த 15 தொழிற்சங்கங்கள் களமிறங்கவுள்ளதாக அச்சங்கத்தின் பிரதம செயலாளர் டாக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை(16) கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து பணி செய்வார்கள் எனவும், அனைத்து வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.