சைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் இணைத்து கொள்வது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடிப்படை கல்வி தகைமைகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே குறித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் கூடும் அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க தான் தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.