சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூல விவாதம் இன்று..

சைட்டம் தனியார் பல்கலைக்கழக மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் இன்று(20) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்றைய நாள் முழுவதும் விவாதிக்க நேற்று(19) கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.