சைட்டம் மாணவிக்கு எதிராக வைத்திய சபை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு…

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்ட ரீதியானது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த குறித்த மாணவியை பதிவு செய்வதில் ஏற்படுகின்ற தாமதத்திற்காக அந்த மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக இலங்கை வைத்திய சபையால் குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவ சட்டத்தின் 29 (02) சரத்தின் கீழ் சைட்டம் நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கான உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.