சைபர் தாக்குதல்களிலிருந்து இணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

(FASTNEWS|COLOMBO)- கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.