(FASTNEWS|COLOMBO) மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் சொகுசு பேரூந்து சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 40 பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து, சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் கவிந்தது.
இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த சுமார் 20 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.