சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக துன்புறத்தப்படும் யாசிதி பெண்களின் நிலை குறித்து ஈராக்கின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தில் உள்ள தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஈராக்கின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் Vian Dakhill ஐ.எஸ் தீவிரவாதிகள் யாசிதி பெண்கள் மீது நடத்தும் கொடூர தாக்குதல் குறித்து வெளியிட்டு கண்ணீர் விட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய யாசிதி இளம்பெண் ஒருவரை 3 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் எதுவும் அளிக்காமல் சிறையில் வைத்திருந்துள்ளனர்.
பின்னர் அவருக்கு அரிசி உணவுடன் இறைச்சியும் வழங்கியுள்ளனர். மிகுந்த பசியுடன் இருந்த அந்த யாசிதி இளம் பெண் அந்த உணவு மொத்தமும் தின்று தீர்த்துள்ளார்.
இதனையடுத்து அந்த யாசிதி பெண்ணிடம் ஐ.எஸ் தீவிரவாதிகள் கூறியது கொடூரத்தின் உச்சம் என்று Vian Dakhill தெரிவித்துள்ளார்.
குறித்த யாசிதி பெண்ணுடன் கடத்தப்பட்ட அவரது ஒரு வயது மகனை கொன்று சமைத்துள்ளதாகவும், அந்த மாமிச உணவையே யாசிதி பெண்ணுக்கு வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 10 வயதேயான யாசிதி சிறுமி ஒருவரை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள், அவரது சகோதரி மற்றும் தந்தையின் முன்னிலையில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கி சித்திரவைதை செய்து கொன்றுள்ளனர்.
இதுவரை பல நூறு யாசிதி பெண்கள் சிறுமிகள் என கடத்திச் சென்று தங்களது பாலியல் அடிமைகளாக வைத்துக் கொண்டுள்ளனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.
மட்டுமின்றி இந்த ஆண்டு துவக்கத்தில் யாசிதி இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்ற ஐ.எஸ், 40 பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளை பொறுத்தமட்டில் யாசிதிகளை இஸ்லாமியர்களாகவோ அரேபியர்களாகவோ ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களை சாத்தான் வழிபாட்டாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
இதனாலையே யாசிதி பெண்கள் மீது ஐ.எஸ் கொடூர தாக்குதல்களை ஏவுகின்றது என சமூக ஆர்வலர்களும் அரசியல் நோக்கர்களும் தெரிவிக்கின்றனர்.