முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வேட்பு மனு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லாக் காசாக மாறியுள்ளார் என ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கி நாட்டின் அரசியலில் மைத்திரிபால சிறிசேன பெறுமதியற்றவராகவும், வாக்களித்த மக்களின் சுமார் 62 லட்ச வாக்குகளுக்கும் துரோகமிழைத்து விட்டார்.
உலக அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு இதுவாகும்.
எனினும், நாம் அனைவரும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்த போராட்டம் கைவிடப்பட மாட்டாது.
தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அரசியல் பூமியிலிருந்து வெளியேற்ற நாம் நடவடிக்கை எடுப்போம் என லால்காந்த தெரிவித்துள்ளார்.
(riz)