சோகத்தில் மூழ்கும் லாஸ்லியா!

(FASTNEWS|COLOMBO) -பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கடந்த வார இறுதியில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசன் காதல் வலையில் இருக்கும் கவின், லாஸ்லியா இருவரும் இருட்டில் மைக் பேட்டரியை கழற்றிவிட்டு பேசியதை தவறாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இன்று காலை வெளியான புரமோவில் கவினை எல்லோரும் நாமினேட் செய்கிறார்கள்.

தற்போது வந்துள்ள போட்டியில் கவின் லொஸ்லியாவும் உன்னை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் என்னை வெளியனுப்பிவிடுவார்கள் என புலம்புகிறார். அவர் குறிப்பிடுவது சேரன் என்பதை அனைவரும் அறிவீர்கள் தானே.

ஏற்கனவே சேரன் தன் மகளாக நினைக்கும் லாஸ்லியாவை கவினிடமிருந்து காப்பாற்ற நினைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.