சோபித தேரரின் இறுதி ஆசை குறித்து எழுத்து மூலம் எதுவும் எழுதிவைக்கவில்லை

காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் உயிருடன் இருந்தபோது கூறிய ஆசைக்கு எதிராக இறுதிக் கிரியைகள் நடைபெறுவதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

சோபித தேரரின் இறுதிக்கிரியை இன்று(12) இடம்பெறுகிறது.

இந்நிலையில் மீகாதென்ன சந்திரஸ்ரீ தேரர், ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறுகையில்,

தமது இறுதிகிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சோபித தேரர் எழுத்துமூலம் எதனையும் எழுதி வைக்கவில்லை.

நேரத்துக்கு நேரம் அவர் சில கருத்துக்களை கூறிவந்தார்.  இந்நிலையில் சிலர் இதனை வைத்துக்கொண்டு சேறு பூச முனைகின்றனர்.

தேரரின் ஆசையின்படி 24 மணித்தியாலங்களுக்குள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அது சிங்கப்பூரிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும் என்றார்.