சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை விவசாய அமைச்சு நிர்ணயிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி,1 கிலோகிராம் சோளத்தின் விலை 43 ரூபாவாக அமையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.