சோளப் பயிர்செய்கையை, மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு விவசாயிகளுக்கு விவசாய திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அண்மைக் காலமாக பயிர்ச் செய்கையில் சேனா படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து விவசாயம் மற்றும் அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் உயர்மட்ட மாநாடு இன்று(26) கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை சோளப்பயிர்ச் செய்கையில் அம்பாறை மாவட்டத்திலேயே படைப்புழுவின் தாக்கம் அதிகம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் செய்கை செய்யப்பட்ட 12,850 ஹெக்டேயரில் 8,0 35 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளது. இது 62.5 சதவீதமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை செய்யப்பட்ட 967 ஹெக்டேயரில் 476 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது 50 சதவீத பாதிப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.