முன்னாள் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (26) ஆஜராகியுள்ளார்.
அவர் இன்று காலை 09.00 மணியளவில் ஆணைக்குழு முன் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தல பிரதேசத்தில் சுமார் 45 ஏக்கர் தனியார் நிலத்தில் தென்னை பயிரிடுவதற்கான கன்றுகள், தொழிலாளர் மற்றும் பிற வசதிகளை தெங்கு பயிர் செய்கை சபை மூலம் பெற்றுக் கொண்டது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
தற்சமயம் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.