இலங்கையின் ஜனநாயக வலுவூட்டலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
இதனை இலங்கையின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச்சபை அமர்வில் பங்கேற்றபோது ஒபாமா, மைத்திரியிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றுவதில் தமக்கு நம்பிக்கையிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.