கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களை உரிய புனருத்தாபன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
யாசகத்தில் ஈடுபடுவோர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அந்த தொழிலை கைவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வாழ்கையை நடாத்திச் செல்ல முடியாதவர்கள் நகர நன்கொடை ஆணையாளரை சந்திக்குமாறும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.