கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பிரதான விமான ஓடுதளம் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை பகல் வேளைகளில் மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மூடப்படவுள்ளது. இரவு வேளையில் பிரதான விமான ஓடுதளம் பயன்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு மூடப்படும் காலப் பொழுதுகளில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் சகல விமானங்களும் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளன.
இது தொடர்பான அறிவித்தல்கள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.