ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட புகையிரத சேவை…

எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டு தங்களின் சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி, பல்வேறு விசேட புகையிரத சேவைகள் இயக்கப்படுகின்றன.

மேலும் பதுளை, பண்டாரவளை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோருக்கான விசேட புகையிரத சேவையும் கொழும்பில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த சேவைகள் அனைத்தும் ஜனவரி 7 ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.