ஜனாதிபதிக்கு ஆதரவாகும் ஐதேக உறுப்பினர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எதிர்வரும் 3ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அரியாசன உரை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியினால் நடத்தப்படும் அரியாசன உரை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால், அதனை தோற்கடிக்காமல் இருப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் கோரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.