ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலை நடத்த முன்வருவாரானால் அதற்கு தேவையான திருத்தங்களின் பொருட்டு பாராளுமன்றத்தில் ஒத்துழைப்பை வழங்க நேற்று(13) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுகூடிய ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து, அரசியல் நகர்த்தல் நிலைமைகள் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
#rishma