பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை ஏற்றுக் கொள்ளாமல், அரசமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளை சவாலுக்குட்படுத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மூலமாகத் தோற்கடிக்கப்பட்ட நபரை, பிரதமராக ஏற்றுக்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்பதால், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறித்த முன்னணி அறிவித்துள்ளது.