ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை கொண்டு நடத்த முடியாது என அறிவிப்பு..

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை கொண்டு நடத்த முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலான சட்டத்தரணிகள் இன்று(04) நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று(04) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது ஜனாதிபதி சார்பிலான சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் சிலரால் மேற்குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.