ஜனாதிபதிக்கு சபாநாயகரிடம் இருந்து விசேட கடிதம்….

சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று (28) விசேட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் அரசியல் பிரச்சினைக்கு மத்தியில், ரணில் விக்கிரமசிங்கவின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்குமாறு, குறித்த கடிதத்தின் மூலம் சபாநாயகர் கோரியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு, அந்நாடுகளால் விடுக்கப்பட்டு வரும் எச்சரிக்கைகளின் பாரதூரமான நிலைமையைக் கருத்திற்கொள்ளுமாறு, ஜனாதிபதியிடம் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.