‘ஜனாதிபதிக்கு முதுகெலும்பு வளைக்க வேண்டாம்.. நாளை முதல் அரசினை வழிநடத்துவது நான்’- ராஜிதவின் இரகசிய வீடியோ குறித்து ஜனாதிபதி அவதானம்…

‘ஜனாதிபதிக்கும் முதுகெலும்பினை வளைக்க வேண்டாம் நாளை முதல் அரசினை வழிநடத்துவது நான்’ என்று, பிரதமருக்கு தான் ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து ஜனாதிபதியின் அவதானம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையே குறித்த கலந்துரையாடல் ஊடக கெமராக்களில் இவ்வாறு பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.