(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டு வரும் திட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள இம் மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் யோசனை மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாடு செய்து உள்ள மாநாட்டில் வைத்து அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் இணை தலைவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.