ஜனாதிபதியிடமிருந்து, ஜகத் ஜயசூரியவுக்கு தொலைபேசி அழைப்பு..

முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றியவருமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு வழக்கை தொடுப்பதற்கு செயற்பாட்டாளர்கள் வெளிநாட்டில் ஆயத்தமாகி வருவது குறித்து இதன் போது ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

 

(rizmira)