ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட சந்திப்பு ஒன்றுக்காக இன்று(11) இரவு 07.00 மணிக்கு வருகை தருமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 04ம் திகதி இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி, தற்போது அரசியல் நிலவரம் தொடர்பில் 07 நாட்களில் தீர்மானம் எடுப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.