ஜனாதிபதியினால் ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 51 உறுப்பினர்களுக்கு சிவப்பு சமிஞ்சை

கட்சியின் சட்டம், ஒழுங்கை மீறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கும் 51 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அமைப்பாளர் பதவியும், உறுப்பினர் அந்தஸ்தும் நீக்கப்படலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியை இரண்டாக்கி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட கட்சியொன்று அரசியல் வரலாற்றில் பதிவாகவில்லை. லலித் அதுலத் முதலியும் காமினி திஸாநாயக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்ததனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும், அதனை வெற்றிப் பாதையில் எடுத்துச் செல்வதே தனது இலக்கு எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 41 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.