நிதி விவகாரங்கள் மற்றும் மத்திய வங்கியுடன் தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை முன்னெடுக்கும் போது தன்னையும், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரையும் உள்ளடக்கிய குழுவினூடா தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கின்ற போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இன்னும், நிதி தொடர்பான தீர்மானங்கள் கலந்துரையாடலின் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்று எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.