ஜனாதிபதியின் பரிந்துரையினை இன்று(07) கூடிய அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி..

பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(07) கூடிய அரசியலமைப்பு சபையில், பிரதானமாக வெற்றிடமாக நிலவும் உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர ஓய்வு பெற்ற பிறகு அப்பதவிக்கான ஜனாதிபதியினால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர் அரசியலமைப்பு சபையினால் ஏகமனதாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெற்றிடமாக நிலவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிபதி தொடர்பில் ஜனாதிபதியினால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் இன்று(07) மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் தலதா அதுகோரல, பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, ஜயந்த தனபால, நாகானந்தம் செல்வகுமார் மற்றும் ஜாவிட் யூசுப் ஆகியோர் இதில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.