ஜனாதிபதியின் வழிகாட்டலில் ‘தேசிய உணவு உற்பத்தி புரட்சி’ இன்று ஆரம்பம்..

தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிகாட்டலில் ஆரம்பிக்கப்படும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி இன்று(06) ஆரம்பமாகின்றது.

செயற்திட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் தேசிய ஏர்பூட்டு விழா இன்று(06) காலை கெக்கிராவ திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்துக்கு அருகில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன்று முதல் 12ஆம் திகதி வரையான வாரம் உணவு உற்பத்தி புரட்சியின் ஆரம்ப வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் தேசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

 

(rizmira)